இந்திய அரிசி இறக்குமதியால் இலங்க விவாசயிகள் பாதையில் என சன்ன ஜெயசுமன சாடல்!

பண்டிகைக் காலத்தைக் காரணம் காட்டி, அரசாங்கம் இந்தியாவிலிருந்து பெருமளவு பொன்னி சம்பா அரிசியை இறக்குமதி செய்வதே, உள்நாட்டு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் சன்ன ஜெயசுமன குற்றம் சாட்டியுள்ளார். உரம் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால், ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு தற்போது 135 ரூபாயைத் தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடந்த காலங்களில் 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு கிலோ நெல்லின் விலை, தற்போது 80 முதல் 90 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. சந்தையில் கீரி சம்பா அரிசி 360 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட இந்திய பொன்னி சம்பா 229 ரூபாய்க்கு விற்கப்படுவதால் நுகர்வோர் உள்நாட்டு அரிசியைக் கைவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் நெல் உற்பத்தி மையமான பொலன்னருவாவின் மெதிரிகிரியா போன்ற பகுதிகளில்கூட, சதோசா மூலம் இந்திய அரிசி விற்பனை செய்யப்படுவது அரசாங்கத்தின் முரண்பாடான கொள்கையைக் காட்டுவதாக விசனம் தெரிவித்துள்ள அவர், சொந்த நாட்டு விவசாயிகளின் அறுவடையைக் கொள்வனவு செய்ய முடியாத அரசாங்கம், எவ்வாறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.




