LATEST
சுகாதாரத்துறையில் 2,652 பேருக்கு புதிய நியமனங்கள்முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர்!இந்திய அரிசி இறக்குமதியால் இலங்க விவாசயிகள் பாதையில் என சன்ன ஜெயசுமன சாடல்!பல மாவட்டங்களில் இன்று மழை – பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை!இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!சுகாதாரத்துறையில் 2,652 பேருக்கு புதிய நியமனங்கள்முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!நீதவான் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டார் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர்!இந்திய அரிசி இறக்குமதியால் இலங்க விவாசயிகள் பாதையில் என சன்ன ஜெயசுமன சாடல்!பல மாவட்டங்களில் இன்று மழை – பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை!இன்றைய டொலர் மாற்று விகிதம் வெளியீடு!இலங்கையின் முதல் ஈ-பொருளாதார கணக்கெடுப்பு ஆரம்பம்!உகாண்டா பணம் விவகாரம் – மத்திய வங்கி முக்கிய விளக்கம்!
உள்ளூர்

சுகாதாரத்துறையில் 2,652 பேருக்கு புதிய நியமனங்கள்

July 3, 2026 · Tamil Ceylon LK

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், நீண்ட காலத்திற்குப் பின்னர் நிலவும் இந்த வெற்றிடங்கள் பல கட்டங்களின் கீழ் நிரப்பப்படவுள்ளன.

இதற்கமைய, முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் 627 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை (04) வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து, ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும், ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், ஒகஸ்ட் 01 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்கள், 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›