நோர்வுட்டில் குளவித் தாக்குதல் 11 பேர் காயம்!

நோர்வுட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அயர்ஃபி தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று மீது இன்று (11) இடம்பெற்ற குளவித் தாக்குதலில் 11 தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலைத் தோட்ட மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த குளவிக்கூடொன்றை வேட்டையாடுவதற்காக பருந்து ஒன்று தாக்கியமையினாலேயே இவ்வாறு குளவிகள் கலைந்து வந்து தாக்கியுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் 8 பேர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர்.
மேலும் மூவர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow & Share




