LATEST
பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!பயணிகள் கப்பல் விபத்து – மீட்புப் பணி தொடர்கிறது!இலங்கை தொழிலாளர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய எச்சரிக்கை!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!
உள்ளூர்

காற்சட்டையில் மறைத்து கொண்டுவந்த குஷ்!

September 13, 2026 · Tamil Ceylon LK

குஷ் போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த விமானப் பயணி ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர் குறித்த போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவந்து, விமான நிலையத்தின் வர்த்தகர்களுக்கான பசுமை வழி ஊடாக வெளியேற்ற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் மாத்தறை, வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய வர்த்தகர் ஒருவர் ஆவார்.


சந்தேக நபர் நேற்று (12) மாலையில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளார்.


இதன்போது அவர் 668 கிராம் குஷ் போதைப்பொருளை 3 பொதிகளாகத் தயாரித்து, தான் அணிந்திருந்த காற்சட்டையில் மறைத்து நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.


இந்தப் போதைப்பொருள் தொகையின் மதிப்பு 66 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அவர் கொண்டுவந்த குஷ் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›