LATEST
நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டதாக தயாசிறி சர்வதேச முறைப்பாடு!உலக ஈட்டி எறிதல் அரங்கில் மீண்டும் இலங்கை கொடி உயர்த்திய ருமேஷ்!டெங்கு மீண்டும் தீவிரம் – மக்கள் அவதானம்!விலங்குகளை காக்க யாலா தற்காலிகமாக மூடல்!சவூதி எண்ணெய் குழாய் மூடல்; உலக சந்தையில் அதிர்ச்சி!மின்னல், பலத்த காற்று – மக்கள் அவதானம்!22ஆவது திருத்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சியின் பெரும் நடவடிக்கை!வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!
உள்ளூர்

வறட்சி தீவிரம் – குடிநீர் விநியோகம் தொடர்கிறது!

September 13, 2026 · Tamil Ceylon LK

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 43,221 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதில் மொனராகலை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தின் 08 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 13,139 குடும்பங்களைச் சேர்ந்த 42,429 நபர்களுக்குக் குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 11,142 குடும்பங்களைச் சேர்ந்த 33,394 நபர்களுக்கும், பதுளை மாவட்டத்தின் 6,653 குடும்பங்களைச் சேர்ந்த 25,413 நபர்களுக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 8 மாவட்டங்களிலுள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த 8 மாவட்டங்களிலும் 49,334 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 நபர்கள் இந்த வானிலை நிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›