சொகுசு வாகன வழக்கில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு புதிய விசாரணை திகதி!

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனமொன்றை வைத்திருந்தமை தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதவான் பசந்த அமரசேன இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ், இது மோட்டார் வாகனக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு என நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டார்.




