இன்று பலத்த காற்றுடன் கூடிய மழை!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள இன்றைய அறிவித்தலின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் உட்பட காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும்.
அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காற்றின் வேகம் குறித்து கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
Follow & Share




