LATEST
மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!மாகாண சபை, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக வாய்ப்பு!பலத்த காற்று எச்சரிக்கை! கடல் கொந்தளிப்பு தீவிரம் – மக்களுக்கு அவசர அறிவிப்பு!தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஒரே மேசையில்; கொழும்பில் முக்கிய ஆலோசனை!நெல்லை ரூ.150க்கு வாங்கினால்… அரிசியை எவ்வளவு ரூபாய்க்கு விற்பீர்கள்?’ – நாமல் கருணாரத்ன!நீதிமன்றத்தில் ஆஜராகாத விமல் வீரவங்ச; வழக்கில் புதிய திருப்பம்!அமெரிக்கா – ஈரான் பதற்றம் தீவிரம்; உலக எண்ணெய் விலை திடீர் உயர்வு!ஒரே நாளில் ரூ.21 லட்சம் அபராதம் விதித்த நுகேகொட நீதிமன்றம்!ஈரானின் முக்கிய நகரங்கள் மீது அமெரிக்காவின் அதிரடி தாக்குதல்!
உள்ளூர்

16 வயதுக்கு கீழ் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு!

July 8, 2026 · Tamil Ceylon LK

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அல்லது அதற்கு தடை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவர்களின் இணைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கமும் World Vision அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

மேலும் ›