LATEST
அரசு நிலத்தை விற்க முயற்சி! சிக்கிய மெர்வின் சில்வா – பிரசன்ன ரணவீர; கம்பஹா நீதிமன்றத்தில் அதிரடி!கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்பம்!அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு: பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக திகதியிடப்பட்டது!கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!அரசு நிலத்தை விற்க முயற்சி! சிக்கிய மெர்வின் சில்வா – பிரசன்ன ரணவீர; கம்பஹா நீதிமன்றத்தில் அதிரடி!கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்பம்!அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை!யோஷித ராஜபக்ஷ மீதான வழக்கு: பூர்வாங்க விசாரணை மாநாட்டிற்காக திகதியிடப்பட்டது!கட்டார் விஜயத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்.துணை மேயராகத் தேர்வான அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு சலுகை!பட்டயப் பத்திரிகையாளர் மசோதாவை உடனே திரும்பப் பெறுங்கள்!தெற்காசியாவின் நீளமான நீர்ப்பாசன சுரங்கம் பொதுமக்களுக்கு திறப்பு!
உள்ளூர்

கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குழப்பம்!

July 16, 2026 · Tamil Ceylon LK

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த கருத்துக்களால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை அடுத்து, கூட்டம் இன்று (16) இடைநடுவில் நிறுத்தப்பட்டது. கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

கூட்டத்தின் போது, திருவையாறு பகுதியில் அமைச்சர் லால் காந்தவின் தென்னை செய்கை விநியோகத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார். அத்துடன், மாவட்ட அரசாங்க அதிபரும் இதற்கு உடந்தையாகச் செயற்படுவதாக அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத்திலிருந்து வெளியேறியதுடன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலும் முரண்பாடுகள் தீவிரமடைந்தன.

இதன் விளைவாக, பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். தொடர்ந்து, பொலிஸாரால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கிருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. முன்னதாக, இவ்வருடத்திற்கான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் சிறீதரன், இளங்குமரன், அர்ச்சுனா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பாதுகாப்புத் தரப்பு மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›